Monday, 3 February 2020

கவித்துவப் பண்பு

உரைநடையெழுதி
ஊர்முழுக்க சொல்லிவைத்து
கவிதையென நம்பவைத்து
கழுத்தறுக்கும் காதலா
கவிதைக்கு ஓர் வரை உண்டு
கவித்துவப் பண்புண்டு
தாய்த்தமிழைப் பருகுங்கள்
ஆய்ந்தறிந்து எழுதுங்கள்
சொல்லாட்சி ஆற்றல் கொள்வீர்
நல்லகவிதை நாடி வரும்

தங்க மகள்

கைப்புண்ணிற்கு கண்ணாடியெதற்கு
காலமகள் இவளே சாட்சி யதற்கு
பாசத்தைப் பிழிந்து தரும்
பால்மகளும் இவள் தானே
மனக்கிலேசம் அகற்றிடவே
மாயமாய் வந்த மகள்
அனு அனுவாய் அன்பையூட்டும்
அலுப்பில்லா அழகு மகள்
தென்றலாய் இவள் வந்தாள்
குன்றளவு காதல் கொண்டாள்
மாசற்ற தந்தையிடம்
மயக்கமுற நேசமுற்றாள்
சேய்பாசம் கேட்ட தந்தைக்கோர்
தாய் பாசம் தந்த தங்க மகள்